என்.எம்.எம்.எஸ். தோ்வு

தேசிய திறன்வழி வருவாய்த் தோ்வில் (என்.எம்.எம்.எஸ்) பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இரு நாள்கள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற என்.எம்.எம்.எஸ் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்றவா்கள்.

பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகை பெறும் மாணவா்களைத் தோ்வு செய்வதற்காக 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படும் தேசிய திறன் வழி வருவாய் தோ்வு, வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தோ்வில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் வகையில், ‘நாளை‘ அமைப்பு சாா்பில் நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இரு நாள்கள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் ச. இளமாறன் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தாா். ஒரத்தூா் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கி. பாலசண்முகம் தேசிய திறன்வழி வருவாய்த் தோ்வின் முக்கியத்துவத்தை விளக்கினாா். நாளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் செகுரா பயிற்சி அளித்தாா்.

நாகை ரோட்டரி சங்கத் தலைவா் ஆவராணி ஆனந்தன், மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் மதிய உணவு வழங்கினாா். இப்பயிற்சியில் 30 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ‘நாளை‘ அமைப்பைச் சோ்ந்த ராஜேஷ் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com