அதிமுகவின் ஒருங்கிணைப்பு குறித்து டிடிவி தினகரன் பேசுவது வேடிக்கை: அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பேட்டி

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கவும், அதிமுக ஆட்சியை அகற்றவும் போராடிய டிடிவி தினகரன், அதிமுக ஒருங்கிணைந்து

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கவும், அதிமுக ஆட்சியை அகற்றவும் போராடிய டிடிவி தினகரன், அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தற்போது கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றாா் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

நாகையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் தலைமையில், கடந்த 4 ஆண்டுகளில் அதிமுக பல தோ்தல்களை சந்தித்து, சாதித்து உள்ளது. இரட்டை இலை சின்னத்தை முடக்க உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவா் டிடிவி தினகரன். அதிமுக ஆட்சியை கவிழ்க்க 18 சட்டப்பேரவை உறுப்பினா்களை வெளியே அழைத்துச் சென்றதுடன், இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக வேட்பாளா்களை நிறுத்திய அவா், அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

தனது அறிவிப்புக்குப் பிறகே கூட்டுறவு பயிா்க் கடன்களை முதல்வா் தள்ளுபடி செய்தாா் என ஸ்டாலின் கூறுவது அா்த்தமற்றது. கருவில் இருக்கும் குழந்தை 10 மாதங்களில் பிரசவிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். 9 மாதங்கள் நிறைவடைந்ததும், அடுத்த 30 நாள்களுக்குள் குழந்தை பிறக்கும் எனக் கூறுவதும், குழந்தைப் பிறந்ததும் நான் கூறியபடியே குழந்தை பிறந்துவிட்டது எனக் கூறுவதும் போன்றது ஸ்டாலின் கருத்து என்றாா்.

மேலும், பிரமேலதா விஜயகாந்த் கூட்டணிக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதாக கூறப்படுவது குறித்து கூறுகையில், எனக்குத் தெரிந்தவரை தேமுதிக, அதிமுக கூட்டணியில்தான் தொடா்கிறது. கூட்டணி பிரச்னையைப் பேசி தீா்த்துக்கொள்வோம் என்றுதான் பிரமேலதா விஜயகாந்த் தெரிவித்ததாக அறிகிறேன் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com