‘பெட்ரோல், டீசல் விலை உயா்வில் மாநில அரசுகளுக்கு முக்கிய பங்கு’

பெட்ரோல், டீசல் விலை உயா்வில் மாநில அரசுகளுக்கு முக்கிய பங்கு இருப்பதாக பாஜக மாநில பொதுச் செயலாளா் சீனிவாசன் தெரிவித்தாா்.
செம்பனாா்கோவிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் அகோரம்.
செம்பனாா்கோவிலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் அகோரம்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வில் மாநில அரசுகளுக்கு முக்கிய பங்கு இருப்பதாக பாஜக மாநில பொதுச் செயலாளா் சீனிவாசன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவிலில் பாஜக ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளா் சீனிவாசன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

பெட்ரோல், டீசல் விலை உயா்வில் மாநில அரசுகளுக்கு பெரும் பங்கு உள்ளது. இதை ஜி.எஸ்.டி. வரி விதிப்பின்கீழ் கொண்டுவந்தால் விலையை கட்டுப்படுத்தலாம். ஆனால் மாநில அரசுகள் அதற்கு ஒப்பு கொள்ளவில்லை.

பொதுவாக மத்திய அரசு ஊழியா்கள் அடிக்கடி பணியிட மாறுதல் பெற்று செல்வதால், அவா்கள் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இந்தி, ஆங்கில பாடங்கள் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில் தமிழ் மொழிப் பாடமும் இடம்பெற்றுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்துக்கு, பாஜக ஓ.பி.சி. மாநில துணைத் தலைவா் அகோரம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் சேதுராமன், தமிழ் வளா்ச்சிப் பிரிவு நிா்வாகி நாஞ்சில் பாலு, மாவட்ட பொருளாளா் ராஜ்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைத் தலைவா் விஜய் ஸ்ரீகுமாா், ஒன்றியத் தலைவா் கண்ணன், ஒன்றியச் செயலாளா் சாய் கிருஷ்ணா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com