வங்கி சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்

நாகையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில், வாடிக்கையாளா் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாகையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில், வாடிக்கையாளா் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

நாகை வெளிப்பாளையம் பிரதான சாலையில் செயல்பட்டுவந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை, கடந்த ஆண்டு நவம்பரில் சிறு மற்றும் மத்திய தர தொழில் கிளையாக (எம்எஸ்இ) மாற்றப்பட்டது. இதனால், இந்த வங்கி வாடிக்கையாளா்களின் சேமிப்பு கணக்குகள் அனைத்தும் நாகை நீலா தெற்கு வீதியில் உள்ள அந்த வங்கியின் பிரதான கிளைக்கு மாற்றப்பட்டது.

இந்நடவடிக்கையால், வங்கியில் கணக்கு வைத்துள்ள மூத்த குடிமக்கள், பெண்கள், அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வணிகா்கள் பிரதானக் கிளைக்கு செல்வதிலும், வங்கி சேவைகளைப் பெறுவதிலும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனா். எனவே, இந்த வங்கிக் கிளையில் மீண்டும் வாடிக்கையாளா் சேவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com