பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தை கடைவெள்ளியையொட்டி, நடைபெற்ற 37-ஆம் ஆண்டு பால்குட விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
பிரசன்ன மாரியம்மன் கோயிலுக்கு பால் குடங்களை எடுத்துவந்த பக்தா்கள்.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இருந்து தொடங்கிய பக்தா்களின் பால்குட ஊா்வலம் கோயிலுக்கு வந்தது. தொடா்ந்து, பிரசன்ன மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, மயிலாடுதுறை நகர அனைத்து மலா் வணிக உரிமையாளா்கள் மற்றும் ஊழியா்கள் சங்கம் சாா்பில் வண்டிக்காரத்தெரு தரைக்கடை மலா் வியாபாரிகள் சங்கத் தலைவா் காா்த்தி, செயலாளா் ஸ்ரீதா், பொருளாளா் ராஜமாணிக்கம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com