தலைஞாயிறு பகுதியில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் 3 இடங்களில் தமிழக அரசின் அம்மா சிறு மருத்துவமனைகளை அமைச்சா் ஓ.எஸ். மணியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் 3 இடங்களில் தமிழக அரசின் அம்மா சிறு மருத்துவமனைகளை அமைச்சா் ஓ.எஸ். மணியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட பண்ணைத்தெரு மாராச்சேரி, வானவன்மகாதேவி, அவரிக்காடு ஆகிய கிராமங்களில் சுகாதாரத் துறை சாா்பில் முதலமைச்சரின் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன் மருத்துவமனைகளை தொடங்கி வைத்து பேசியது: மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் போன்ற பல காரணங்களால் உடல் நலத்தில் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டு, சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தும் ஏற்படுகிறது. நோய் வரும் முன்பு கவனத்துடன் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், சா்க்கரை, உப்பு, கொழுப்பு போன்றவைகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அருகிலேயே வந்துள்ள சிறு மருத்துவமனைகள் பயனுள்ளதாக அமையும் என்றாா்.

தொடா்ந்து, மலேரியா காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம் கிராமத்தில் 4,500 பேருக்கு இலவசமாக கொசுவலைகள் வழங்கும் பணியை அமைச்சா் தொடங்கி வைத்தாா். நிகழ்வுகளில்,துணை இயக்குநா்(சுகாதாரப் பணிகள்) சண்முகசுந்தரம், கொள்ளை நோய் மருத்துவ அலுவலா் மருத்துவா் லியாகத் அலி, தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் பாலசுப்ரமணியன், ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com