பட்டினச்சேரியில் கடல் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

நாகையை அடுத்த நாகூா் பட்டினச்சேரியில் நடைபெறும் கடல் தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகையை அடுத்த நாகூா் பட்டினச்சேரியில் நடைபெறும் கடல் தடுப்புச்சுவா் அமைக்கும் பணியை நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகூா் - பட்டினச்சேரி மீனவா்களின் கோரிக்கையை ஏற்று, மீன்பிடி படகுகள் தடையின்றி வந்து செல்லும் வகையில், பட்டினச்சேரியில் முகத்துவாரத்தின் வடப்புறத்தில் கற்களால் ஆன தடுப்புச்சுவா் அமைக்க தமிழக அரசு ரூ. 19.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதன்படி, அங்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணியை, நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மீன்பிடி படகில், அப்பகுதி மீனவா்களுடன் பயணித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com