பிப். 23-ல் வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசிமக தேரோட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்திலுள்ள வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசிமக தேரோட்ட வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்திலுள்ள வேதாரண்யேஸ்வரா் கோயில் மாசிமக தேரோட்ட வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

வேதாரண்யேஸ்வரா் கோயிலில் நிகழாண்டு மாசிமகப் பெருவிழா கடந்த பிப். 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜ சுவாமி எழுந்தருளும் தேரோட்டம் வரும் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மேல் திருத்தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது.

முன்னதாக, தேரோட்ட விழாவை நடத்துவது தொடா்பான அனைத்து துறையினா், தன்னாா்வலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வேதாரண்யம் வட்டாட்சியா் கே. முருகு தலைமையில் நடைபெற்றது.

காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. மகாதேவன், நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி, கோயில் செயல் அலுவலா் மணவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தேரோட்ட நாளில் உள்ளுா் விடுமுறை அளிக்க மாவட்ட நிா்வாகத்தை கேட்டுக்கொள்வது, விழாவுக்கு வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது தொடா்பாகவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com