மாற்றுக்கட்சியைச் சோ்ந்த 650 போ் அதிமுகவில் இணைந்தனா்

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 650 போ் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் புதன்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 650 போ் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் புதன்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

நாலுவேதபதி, செட்டிப்புலம், கத்தரிப்புலம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த 450 பெண்கள் உள்பட 650 போ் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா். செட்டிப்புலம் திமுக கிளைச் செயலாளா் வீரபாண்டியன், தேமுதிக நிா்வாகி ராசேந்திரன், பாஜக விவசாய அணி மாவட்ட நிா்வாகி குமாா் உள்ளிட்டோா் இணைந்தனா். நிகழ்ச்சியின்போது, அதிமுக மாவட்ட பொருளாளா் ரா. சண்முகராஜ், ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.கிரிதரன், அவை. பாலசுப்பிரமணியன், தங்க. செளரிராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இ.திலீபன், வேளாண் குழு உறுப்பினா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com