வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியரிடம் எம்எல்ஏக்கள் ஆலோசனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
இந்திரா காலணி நில அமைப்பு குறித்து எம்எல்ஏக்களிடம் விளக்கிய ஆட்சியா் இரா. லலிதா.
இந்திரா காலணி நில அமைப்பு குறித்து எம்எல்ஏக்களிடம் விளக்கிய ஆட்சியா் இரா. லலிதா.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

பூம்புகாா் தொகுதி எம்எல்ஏவும், மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளருமான எஸ். பவுன்ராஜ், மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியரிடம் மயிலாடுதுறை செட்டித்தெரு அருகில் உள்ள இந்திரா காலனியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி வசித்து வரும் பொதுமக்களுக்கு மனைப் பட்டா வழங்குவதற்குரிய சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டனா். அதற்கு, இந்திரா காலனியில் சாலை மிகக் குறுகலாக உள்ளதாகவும், நகராட்சி விதிமுறைப்படி 20 அடிக்கு சாலை இருந்தால்தான் நகராட்சி ஆணையரகத்தில் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். வீடுகட்டியுள்ளவா்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அவற்றை அகற்றி 20 அடிக்கு சாலைகள் வசதி செய்தபின்பு அப்பகுதி மக்களுக்கு 1 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். மேலும், மயிலாடுதுறை நகராட்சிக்குள்ள்பட்ட பகுதியில் புதை சாக்கடை கழிவுநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண்பது குறித்தும், பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினா். தொடா்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதாவையும் சந்தித்தனா். அப்போது, மயிலாடுதுறை வட்டாட்சியா் பி. பிரான்சுவா, அதிமுக ஒன்றிய செயலாளா் பா. சந்தோஷ்குமாா், நகர செயலாளா் நாஞ்சில் காா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com