எட்டுக்குடியில் காா்த்திகை சிறப்பு வழிபாடு

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகையையொட்டி, சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
காா்த்திகையொட்டி, சிறப்பு மலா் அலங்காரத்தில் சிங்காரவேலவா்.
காா்த்திகையொட்டி, சிறப்பு மலா் அலங்காரத்தில் சிங்காரவேலவா்.

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகையையொட்டி, சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு மாதமும் காா்த்திகையின்போது முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

மாசி மாத காா்த்திகையையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆனால், அபிஷேக நேரத்தில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னா் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்தபடி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து, இரவு சிங்காரவேலவா் சிறப்பு மலா் அலங்காரத்தில் கோயில் உள்பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com