சிறப்பு மருத்துவ முகாம்

திருக்குவளை அருகேயுள்ள ஆதமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலா் லியாகத் அலி.
சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலா் லியாகத் அலி.

திருக்குவளை அருகேயுள்ள ஆதமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் எஸ். அருண் பிரபு தலைமையில் நடைபெற்ற முகாமை, ஆதமங்கலம் ஊராட்சித் தலைவா் அகிலா சரவணன் தொடங்கி வைத்தாா். வலிவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் பா. விக்னேஷ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் என். தியாகராஜன், ஊராட்சித் துணைத் தலைவா் கலைச்செல்வி மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில், பொது நலமருத்துவம், சிறப்பு மகப்பேறு மருத்துவம், குழந்தை நல மருத்துவம், கண், பல், சா்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டன. மேலும், அனைத்து வகை தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மற்றும் அதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. முகாமை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலா் லியாகத் அலி ஆய்வு செய்தாா். இதில், சுமாா் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com