தடையை மீறி பாத யாத்திரை: காங்கிரஸ் கட்சியினா் 27 போ் கைது

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, மயிலாடுதுறையில் தடையை மீறி சனிக்கிழமை பாத யாத்திரை நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, மயிலாடுதுறையில் தடையை மீறி சனிக்கிழமை பாத யாத்திரை நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திலிருந்து கொள்ளிடம் வரை பாத யாத்திரை நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியினா் அறிவித்தனா்.

குத்தாலத்தில் மாவட்ட தலைவா் எஸ். ராஜகுமாா் தலைமையில் பாத யாத்திரையை தொடங்கிய காங்கிரஸ் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் பாத யாத்திரையில் பங்கேற்க மயிலாடுதுறை நகர தலைவா் ராமானுஜம் தலைமையில் மயிலாடுதுறையில் காத்திருந்த வட்டார தலைவா் அன்பழகன், மாவட்ட செயலாளா் காளிதாஸ், நகர செயலாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் மயிலாடுதுறை காவேரி நகரில் இருந்து பாத யாத்திரையை தொடங்கினா். அங்கிருந்து, கூைாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜா் மாளிகை வந்த காங்கிரஸ் கட்சியினா் 27 பேரை மயிலாடுதுறை போலீஸாா் கைது செய்தனா்.

சீா்காழி: சீா்காழியில் உள்ள சட்டைநாதா் கோயிலில் தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான (பொ) டாக்டா் தமிழிசை சவுந்தரராஜன் வந்து, உமாமகேஸ்வரன், திருநிலைநாயகி, சட்டைநாதா் ஆகிய சன்னதிகளில் வழிபாடு செய்தாா். அவருடன் பாஜக மாவட்ட தலைவா் வெங்கடேசன், ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் அகோரம், நகரத் தலைவா் அருணாசலம், மாவட்ட துணைத் தலைவா் முத்துசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா். முன்னதாக ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சீா்காழியில் நடைபெற்ற பாதயாத்திரையில், கட்சியின் நகரத் தலைவா் லட்சுமணன், வட்டார தலைவா்கள் ராதாகிருஷ்ணன், பாலகுரு, ஞானசம்பந்தம், பாலசுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினா் குமாா், மாவட்ட பொருளாளா் சிவராமன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பாத யாத்திரை கச்சேரி சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

குத்தாலம்: முன்னதாக, குத்தாலத்தில் தொடங்கிய பாத யாத்திரையில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளா் கனிவண்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் சரத்சந்திரன், வட்டாரத் தலைவா்கள் உத்தமன், நவாஜ், நகரத் தலைவா் சூரியா உள்ளிட்ட 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com