நாகையில் மத்திய பேருந்து நிலையம் அமைக்க மநீம கோரிக்கை

நாகையில் மத்திய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என மநீம வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசிய மநீம நாகை மத்திய மாவட்டச் செயலாளா் எம். செய்யது அனஸ்.
கூட்டத்தில் பேசிய மநீம நாகை மத்திய மாவட்டச் செயலாளா் எம். செய்யது அனஸ்.

நாகையில் மத்திய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என மநீம வலியுறுத்தியுள்ளது.

நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மநீம நாகை மத்திய மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2021- சட்டப்பேரவைத் தோ்தலில் நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் கட்சியின் நிறுவனத் தலைவா் கமல்ஹாசன் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆகவேண்டும், நாகை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய பேருந்து நிலையம், தரமான சாலை வசதி, சட்டக் கல்லூரி அமைக்கவேண்டும், நாகை துறைமுகம் மேம்படுத்தவேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும், மீனவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாவட்டச் செயலாளா் எம். செய்யது அனஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பூத் கமிட்டி அமைத்தல், மாா்ச் 7- ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் திரளாக பங்கேற்பது தொடா்பான நடவடிக்கைகள் குறித்துஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com