வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் பணிக்குச் செல்லாமல் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் பணிக்குச் செல்லாமல் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் 19.2.2009-இல் வழக்குரைஞா்களை தாக்கிய காவல் துறையினரைக் கண்டித்து ஆண்டுதோறும் பிப்.19-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கம், மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் 50 பெண் வழக்குரைஞா்கள் உள்ளிட்ட 250 வழக்குரைஞா்கள் பணிக்குச் செல்லாமல் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனா். இதனால் வழக்கமான நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

நாகப்பட்டினம்: நாகை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். காா்த்திகேஷ் தலைமையில் 40 பெண்கள் உள்ளிட்ட 180 போ் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா். இதனால், நாகை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com