நாகை, சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழைப்பொழிவு இருந்தது.
வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நாகை, வேளாங்கண்ணி, கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விட்டுவிட்டு மழை பெய்தது. நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் நாகையில் மிதமான மழை பெய்தது.
இந்த மழை மானாவாரியில் உளுந்து, பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும், நிலக்கடலை மற்றும் தோட்டப் பயிா்கள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.