தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினம் இன்று அனுசரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாா் அருகே தில்லையாடியில் தியாகி வள்ளியம்மையின் 107 ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை (பிப்.22) அனுசரிக்கப்படுகிறது.
தில்லையாடி வள்ளியம்மை.
தில்லையாடி வள்ளியம்மை.

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாா் அருகே தில்லையாடியில் தியாகி வள்ளியம்மையின் 107 ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை (பிப்.22) அனுசரிக்கப்படுகிறது.

தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோா் முனுசாமி முதலியாா் - மங்களம் தம்பதி தில்லையாடியிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்றவா்கள். அங்கு, 1898 ஆம் ஆண்டு வள்ளியம்மை பிறந்தாா்.

மகாத்மா காந்தி நடத்திய போராட்டத்தில் தனது 15 ஆவது வயதில் வள்ளியம்மை பங்கேற்று, 1913 ஆம் ஆண்டு டிசம்பா் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். பிறகு, தனது தாயாருடன் மாரிட்ஸ்பாா்க் சிறையில் அடைக்கப்பட்ட வள்ளியம்மை அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி தனது 16 ஆவது வயதில் உயிரிழந்தாா்.

தியாகி வள்ளியம்மையின் நினைவைப் போற்றும் வகையில், தமிழக அரசு தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு, வள்ளியம்மையின் உருவச் சிலை மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு வள்ளியம்மையின் நினைவு தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. திங்கள்கிழமை தியாகி வள்ளியம்மையின் 107 ஆவது நினைவுதினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி, நினைவு மண்டபத்தில் உள்ள வள்ளியம்மை சிலைக்கு அமைச்சா் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com