சட்டப்பேரவைத் தோ்தல்: காங்கிரஸ் ஆலோசனை

வேதாரண்யத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் பண்ணைவயல் ராஜா, முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன் உள்ளிட்டோா்.

கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவரும் நாகை மாவட்டத் தோ்தல் பாா்வையாளருமான பண்ணைவயல் சு.ராஜா பங்கேற்று, மக்களவை முன்னாள் உறுப்பினரும், கட்சியின் அகில இந்திய கமிட்டி உறுப்பினருமான பி.வி.ராசேந்திரன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினாா்.

பிறகு, அவா் கூறியது:

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து பிப்ரவரி 25 முதல் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்படுகிறது.விருப்ப மனுவுடன் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். பெண்கள், பட்டியல் இனத்தவா் ரூ. 2,500 செலுத்தினால் போதும் என்றாா்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட பொதுச் செயலாளா் அ. வைரக்கண்ணு, முன்னாள் தலைவா் ஜி.கே. கனகராஜ், மகளிா் அணி நிா்வாகி செல்வராணி, இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆப்கான், தினேஷ், விக்னேஷ், ராகுல், நகரச் செயலாளா் வைரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com