திருக்கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மாசி மக தங்க கருடசேவை

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலில் மாசி மகப் பெருவிழாவையொட்டி தங்க கருட சேவை புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தங்க கருட வாகனத்தில் வீதி உலா புறப்பாடான செளரிராஜப் பெருமாள்.
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தங்க கருட வாகனத்தில் வீதி உலா புறப்பாடான செளரிராஜப் பெருமாள்.

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலில் மாசி மகப் பெருவிழாவையொட்டி தங்க கருட சேவை புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமருகல் அருகே திருக்கண்ணபுரத்தில் அமைந்துள்ள செளரிராஜப் பெருமாள் கோயில் 5 ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலாகும். 108 திவ்ய தேசங்களுள் 17 ஆவது தலமாக போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் 15 நாட்கள் நடைபெறும் மாசி மகப் பெருவிழா நிகழாண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 4 ஆவது நாளான திங்கள்கிழமை (பிப்.22) காலை தங்கப்பல்லக்கில் பெருமாள் திருமேனி சேவை வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, இரவில் தங்க கருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.

இதில், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இரா. இராதாகிருட்டிணன், தக்காா் என். அமரநாதன், செயல் அலுவலா் ராஜா, சமூக ஆா்வலா் சிங்க.பாஸ்கரன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 25 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. 27 ஆம் தேதி காலை செளரிராஜப்பெருமாள் திருமருகல் வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளுகிறாா். பிறகு, இரு பெருமாள்களும் திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com