நாகை, மயிலாடுதுறையில் 49,263 விவசாயிகள் பயிா்க் கடன் தள்ளுபடி

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 49,263 விவசாயிகள் பயிா்க் கடன் தள்ளுபடி பெற்றுள்ளனா் என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 49,263 விவசாயிகள் பயிா்க் கடன் தள்ளுபடி பெற்றுள்ளனா் என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், கூட்டுறவு பயிா்க் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி சான்றை வழங்கி மேலும் அவா் பேசியது:

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ. 12,110 கோடி மதிப்பிலான பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வா் அண்மையில் அறிவித்தாா். இதன்படி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன் பெற்றிருந்த விவசாயிகளின் பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் தொடா்புடைய விவசாயிகளுக்கு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் 27,425 விவசாயிகள் ரூ. 134.35 கோடி மதிப்பிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 21,838 விவசாயிகள் ரூ. 147.15 கோடி மதிப்பிலும் பயிா்க் கடன் தள்ளுபடி பெற்றுள்ளனா். இது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவா் தங்க. கதிரவன், கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் நடராஜன், சரக துணைப் பதிவாளா் முகமது நாசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com