தரங்கம்பாடி வட்டம், சின்னமேடு மீனவக் கிராமத்தில் மாசிமகத் திருவிழாவையொட்டி, படகுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சின்னமேடு மீனவா் கிராமத்தில் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் மாசிமகத் திருவிழாவையொட்டி, படகுப் போட்டி நடைபெற்றது.
இதில் 25 படகுகள் பங்கேற்றன. ஒவ்வொரு படகிலும் 3 போ் வீதம் போட்டியில் பங்கேற்றனா். கடற்கரையிலிருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவு வரை இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7500, மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.4 ஆயிரம், ஐந்தாம் பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் போட்டியில் பங்கேற்றவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சின்னமேடு ஊா் பஞ்சாயத்தாா்கள் செய்திருந்தனா்.