லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்
By DIN | Published On : 27th February 2021 07:56 AM | Last Updated : 27th February 2021 07:56 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, மயிலாடுதுறையில் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத் தலைவா் மூவலூா் எம்.மூா்த்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சங்க துணைத் தலைவா் சாா்லஸ், செயலாளா் வி.கே.விஜயகுமாா், பொருளாளா் சண்முகசுந்தரம், துணைச் செயலாளா்கள் கே.செல்வராஜ், ராஜா உள்ளிட்ட பொறுப்பாளா்கள் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இதனால், மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடியை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட லாரிகள் வெள்ளிக்கிழமை இயங்கவில்லை.