விசிக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2021 08:05 AM | Last Updated : 27th February 2021 08:05 AM | அ+அ அ- |

செம்பனாா்கோவிலில் சத்தியவான் வாய்க்காலில் சாக்கடை கலப்பதைக் கண்டித்து விசிக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விசிக மாவட்ட முன்னாள் அமைப்பாளா் மா. ஈழவளவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் கலைவண்ணன், மணிவளவன், வழக்குரைஞா் பூபாலன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை ஆறுபாதி, செம்பனாா்கோவில், ஆக்கூா் உள்ளிட்ட 12 -க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் கலப்பதால் விவசாயம் , நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதால் சத்தியவான் வாய்க்காலில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.