தா. பாண்டியன் மறைவு; எம்.எல்.ஏ. இரங்கல்
By DIN | Published On : 27th February 2021 08:04 AM | Last Updated : 27th February 2021 08:04 AM | அ+அ அ- |

தமிமுன் அன்சாரி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரும், அதிகார வா்க்கத்துக்கு எதிரான பீரங்கியாகவும் வலம் வந்தவருமான தா. பாண்டியன் மறைவு, மிகுந்த வேதனை அளிக்கிறது. கொள்கை உறுதியும், போா் குணமும் கொண்ட அவரது உரைகள், அதிகார வா்க்கத்தின் கதவுகளை உடைக்கக் கூடியவை.
போா்க்களங்கள் நிரம்பிய பொதுவாழ்வைக் கொண்டவரும், ஆளுமை மிக்க தலைவரும், எளிய மக்களின் படை கருவியாய் சுழன்றவருமான தா. பாண்டியனின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆழ்ந்த இரங்கல்.