வேதாரண்யேசுவரா் கோயிலில் பந்தற்காட்சி
By DIN | Published On : 27th February 2021 08:00 AM | Last Updated : 27th February 2021 08:00 AM | அ+அ அ- |

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் தியாகராஜா், நடராஜா் சுவாமிகள் பந்தலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யேசுவரா் கோயிலில் மாசிமகப் பெருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான பந்தலுக்கு ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜ சுவாமி, ஸ்ரீ நடராஜா் சுவாமி எழுந்தருளும் பந்தற்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், தியாகராஜ சுவாமியும், ஸ்ரீ நடராஜரும் பந்தலுக்கு எழுந்தருளியதும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.