குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொங்கல் பரிசு வழங்குவதற்கான கரும்புகள் கொள்முதல்

குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்குவதற்கான கரும்புகள், கூட்டுறவுத் துறை மூலம் நேரடியாக
நாகை அவுரித் திடலுக்குக் கொண்டு வரப்பட்ட கரும்புகளை, நியாயவிலைக் கடைகளுக்குக் கொண்டுச்செல்லும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.
நாகை அவுரித் திடலுக்குக் கொண்டு வரப்பட்ட கரும்புகளை, நியாயவிலைக் கடைகளுக்குக் கொண்டுச்செல்லும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்குவதற்கான கரும்புகள், கூட்டுறவுத் துறை மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2,500 ரொக்கம் மற்றும் முழு கரும்பு, முந்திரி திராட்சை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜன.4-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள 4,78,549 குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க, கூட்டுறவுத் துறை மூலம் பொங்கல் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு, வட்டம் வாரியாக நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.

மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, காத்திருப்பு, திருவாவலங்காடு, வானாதிராஜபுரம், மன்னன்பந்தல், திருமணஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொங்கல் கரும்புகள், கூட்டுறவுத் துறை மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, டிச.30-ஆம் தேதி முதல் வெட்டப்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, வெட்டப்பட்ட கரும்புகளை வட்டம் வாரியாக பிரித்து அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கான பொங்கல் கரும்புகள், நாகை அவுரித் திடலுக்கு லாரிகள் மூலம் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டிருந்தன. இந்தக் கரும்புகள், நாகை பொதுப் பணியாளா் கூட்டுறவு பண்டக சாலை மூலம் நாகை, கீழ்வேளூா், திருமருகல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டுச் செல்லப்பட்டன.

இதுகுறித்து, நாகை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நடராஜன் கூறியது: நாகை மாவட்டத்தில் உள்ள 585 முழு நேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 151 பகுதி நேர நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கவுள்ள கரும்புகளை வெட்டி, இயக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

நாகை, கீழ்வேளூா், திருக்குவளை வட்டங்கள், மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கான விநியோகம் சனிக்கிழமை (ஜன. 2) இரவுக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கரும்புகள் அனுப்பப்பட்டு விடும். நாகை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்படி, முன் எப்போதும் இல்லாத வகையில் நிகழாண்டில், கூட்டுறவுத் துறை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்புகளைக் கொள்முதல் செய்துள்ளது. உரிய விலை கொடுத்து கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது, கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com