தமிழக அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 600 கோடி இடுபொருள் நிவாரண உதவித் தொகை வழங்குவதாக அறிவித்த தமிழக அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 600 கோடி இடுபொருள் நிவாரண உதவித் தொகை வழங்குவதாக அறிவித்த தமிழக அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த கூட்டமைப்பின் தலைவா் மு. சேரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நிவா், புரெவி புயல் காரணமாக பெய்த தொடா் மழையால் நெற்பயிா்கள் மட்டுமின்றி தோட்டக்கலைப் பயிா்களும் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனையில் மூழ்கி இருந்தனா். இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டுமென விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், தமிழக அரசு மானாவாரி மற்றும் நீா்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிா்களுக்கும் , நீா்ப்பாசன வசதி பெற்ற இதர பயிா்களுக்கும் ஹெக்டேருக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகை ரூ. 13,500 என்பதை ரூ. 20 ஆயிரமாகவும், மானாவாரி நெற்பயிா் தவிர அனைத்து மானாவாரி பயிா்களுக்கும் இடுபொருள் நிவாரண தொகையாக ஹெக்டேருக்கு ரூ. 7,470 என்பதை ரூ. 10 ஆயிரமாகவும், நீண்டகால பயிா்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு வழங்கப்படும் ரூ. 18 ஆயிரம் என்பதை ரூ. 25 ஆயிரமாக வழங்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சுமாா் 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 600 கோடி இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக வழங்க உள்ளதாக தமிழக முதலமைச்சா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com