தருமபுரத்தில் இருதய சிகிச்சை முகாம்

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரில் இருதய சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இருதய மருத்துவ முகாமை தொடங்கி வைத்த தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்.
இருதய மருத்துவ முகாமை தொடங்கி வைத்த தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரில் இருதய சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில், கல்லூரியின் சிறு சுகாதார மையம், பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இருதய சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தாா். இதில், ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, ஈசிஜி, எக்கோ, காா்டியோகிராம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில் பங்கேற்ற 180 பேரில் 11 போ் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூருக்கு அழைத்து செல்லப்பட்டனா். மருத்துவா்கள் கோட்டி, அருண்ராஜ், நாகராஜ் மீனா, மதுமிதா ஆகியோா் சிகிச்சையளித்தனா்.

முகாமில், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் கே.துரை, கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம், ரோட்டரி சங்கச் செயலா் எம். காமேஷ், பொருளாளா் தங்க. துரைராஜ், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன், கல்லூரி சுகாதார மைய மருத்துவா் லோகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com