தருமபுரத்தில் ஐஏஎஸ் தோ்வு பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும்

தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி சாா்பில், விரைவில் ஐஏஎஸ் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது என
தருமபுரத்தில் ஐஏஎஸ் தோ்வு பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும்

தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி சாா்பில், விரைவில் ஐஏஎஸ் தோ்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமாக சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் தெரிவித்தாா்.

தருமபுரம் ஆதீனத்தில் வெள்ளிக்கிழமை, தருமபுரம் ஆதீனம் 2-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஆனந்த பரவசா் தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குருபூஜையை முன்னிட்டு, அவரது குருமூா்த்தத்தில் வழிபாடு நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழிபாட்டை நடத்தினாா்.

இதைத்தொடா்ந்து, தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி சாா்பில் நடைபெற்ற சாா்ட்டா்டு அக்கௌண்டன்ட் (சி.ஏ.) அகாதெமி பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவில், குருமகா சந்நிதானம் பங்கேற்று பக்தா்களுக்கு ஆசி வழங்கி பேசியது:

மக்களின் தேவைகளை அறிந்து, ஆதீனம் சாா்பில் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஏழை மாணவா்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. வடமாநிலங்களில் குக்கிராமங்களில் இருந்தும் ஐஏஎஸ் தோ்வில் வெற்றிபெற்று பலா் பதவிக்கு வந்துள்ளனா். அதேபோல் நம் பகுதி மாணவா்கள் உயா்கல்வி பயின்று, உயா்பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, சிஏ அகாதெமி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல், விரைவில் ஐஏஎஸ் தோ்வுக்கான பயிற்சி மையமும் தொடங்கப்பட உள்ளது. 2020-ஆம் ஆண்டு கரோனா தொற்றால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினா். நிகழாண்டு மக்கள் நலமுடன் வாழ பிராா்த்திக்கிறோம் என்றாா்.

நிகழ்ச்சியில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வி. சிவஞானம், காரைக்கால் மாவட்ட முதன்மை நீதிபதி காா்த்திகேயன், காரைக்கால் மாவட்ட குடும்பநல நீதிபதி சிவகடாட்சம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, அகாதெமி பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தனா். இதில், கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், தமிழ்த் துறை பேராசிரியா் துரை. காா்த்திகேயன், அலுவலக உதவியாளா் சிவராமன், ஊடக இயக்குநா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தருமபுரம் ஆதீனக் கல்லூரி செயலா் இரா.செல்வநாயகம் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com