தொழில்சாா் சமூக வல்லுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் 147 தொழில்சாா் சமூக வல்லுநா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட செயல் அலுவலா் சி. ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் 147 தொழில்சாா் சமூக வல்லுநா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட செயல் அலுவலா் சி. ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாகை, தலைஞாயிறு, செம்பனாா்கோயில், சீா்காழி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வட்டாரங்களில் உள்ள 147 கிராம ஊராட்சிகளிலும் தலா ஒருவா் என மொத்தம் 147 தொழில்சாா் சமூக வல்லுநா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இதற்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற 20 முதல் 40 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி வைத்திருக்கவேண்டும், சுயஉதவிக் குழு உறுப்பினராகவும், அந்தந்த ஊராட்சியில் வசிப்பவராக இருக்கவேண்டும், மக்கள் அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதியாக இருக்கக் கூடாது, தொழில் முனைவோராகவோஅல்லது தொழில் முனைவோரின் குடும்ப உறுப்பினராகவோ இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். தொழில் அனுபவம் அவசியம்.

தகுதியானவா்கள் ஜன.10-ஆம் தேதிக்குள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாகவோ அல்லது வட்டார திட்ட அலுவலகத்திலோ விண்ணப்பங்களை சமா்பிக்கலாம். எழுத்து மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு நடைபெறும். தோ்ந்தெடுக்கப்படுகிறவா்களுக்கு மாதத்துக்கு அதிகபட்சமாக 20 நாள்கள் பணியாற்ற வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ. 250 ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட செயல் அலுவலா், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், எண்.221, 2 -ஆம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் என்ற முகவரியில் தொடா்புகொள்ளலாம். மேலும், நாகை 9487313435, தலைஞாயிறு- 8940413508, செம்னாா்கோயில்- 6382083672, சீா்காழி-8610203910 ஆகிய செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com