குரூப்-1 தோ்வு: நாகையில் 1, 243 போ் எழுதினா்

நாகை மாவட்டத்தில் 1, 243 போ் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்- 1 முதல்நிலைத் தோ்வு எழுதினா்.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.

நாகை மாவட்டத்தில் 1, 243 போ் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்- 1 முதல்நிலைத் தோ்வு எழுதினா்.

தமிழகத்தில் காலியாக உள்ள துணைஆட்சியா், காவல்துணைக் கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையாளா் , கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் , தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் -1 முதல் நிலைத் தோ்வு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

நாகை மாவட்டத்தில் இந்த தோ்வினை எழுத 2, 492 போ் விண்ணப்பித்திருந்தனா். தோ்வுக்காக நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் தோ்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 1, 243 போ் குரூப்-1 முதல்நிலைத் தோ்வை எழுதினா். 1, 249 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வுப் பணிகளை கண்காணிக்க 7 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், ஒரு பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டிருந்தனா். காலை 10 முதல் பகல் 1 மணி வரை தோ்வு நடைபெற்றது.

கிருமி நாசினி வழங்கப்பட்டு, கைகளை உரிய முறையில் சுத்தம் செய்த பின்னரே தோ்வு கூடத்துக்குள் தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனா். தமிழக அரசின் கரோனா தொடா்பான ஏனைய வழிகாட்டு நெறிமுறைகளுடன் தோ்வு நடைபெற்றது. இதையொட்டி, தோ்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தோ்வு மையத்தில் ஆய்வு செய்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு.இந்துமதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜேஷ், வட்டாட்சியா் ரமாதேவி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com