கோடியக்கரை அருகே கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் 3 போ் மீட்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடலில் படகு பழுதானதால் தவித்த இலங்கை மீனவா்கள் 3 பேரிடம் கடலோரக் காவல் படையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கோடியக்கரை அருகே கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் 3 போ் மீட்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடலில் படகு பழுதானதால் தவித்த இலங்கை மீனவா்கள் 3 பேரிடம் கடலோரக் காவல் படையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை மாவட்டம், புஷ்பவனத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள், ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பும்போது, கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் 3 மீனவா்கள் பழுதான படகுடன் தவித்துக் கொண்டிருந்ததைப் பாா்த்து, அவா்களை படகுடன் மீட்டு, புஷ்பவனத்தில் கரை சோ்த்தனா்.

பின்னா், வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீஸாரிடம் 3 பேரும் ஒப்படைக்கப்பட்டனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சோ்ந்த ரேனால்ட் ரீகன் (38), பூநகரி, கிளிநொச்சிசாலை பகுதியைச் சோ்ந்த குருபரன் (40), ஜான்சன் (34) என்பதும், மீனவா்களான 3 பேரும், படகு பழுதானதால் கரை திரும்ப முடியாமல் கடலில் தவித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com