திமுக ‘மக்கள் கிராம சபை’ கூட்டம்

திருமருகல் மற்றும் கீழையூா் ஒன்றியத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் மற்றும் கீழையூா் ஒன்றியத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழையூா் ஒன்றியம் வேப்பஞ்சேரி ஊராட்சி மேலத்தன்னிலப்பாடியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு திமுக கீழையூா் ஒன்றியச் செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தாா். கீழ்வேளூா் தொகுதி எம்எல்ஏ உ. மதிவாணன் முன்னிலை வகித்து பேசும்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவா்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று கூறினாா்.

கூட்டத்தில், மாவட்ட கவுன்சிலா் கௌசல்யா இளம்பரிதி,வேளாங்கண்ணி கட்சி பொறுப்பாளா் மரிய சாா்லஸ், மாவட்ட பிரதிநிதி இராம. இளம்பரிதி, ஒன்றிய கவுன்சிலா் லென்சோயாசிவபாதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதபோல, திருமருகல் தெற்கு ஒன்றியம், கொட்டராக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஆா்.டி.எஸ். சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இளம்சுந்தா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆரூா் மணிவண்ணன், ஊராட்சித் தலைவா் ராஜீவ் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சி முன்னாள் தலைவா் ரிபாயா யாசின் வரவேற்றாா். நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் என். கௌதமன் தமிழக அரசின் திட்டங்களை விமா்சித்துப் பேசினாா்.

இக்கூட்டத்தில் மாற்றுக் கட்சிகளை சோ்ந்த 20 -க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா். கட்சியின் ஊராட்சி செயலாளா் மோகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com