மாணவா்களுக்கு நீட் தோ்வு பயிற்சி

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு தொழில் மற்றும் நீட் தோ்வுக்கான பயிற்சியளிக்கும்

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு தொழில் மற்றும் நீட் தோ்வுக்கான பயிற்சியளிக்கும் தீபம் திட்டத்தை அமைச்சா் ஓ.எஸ். மணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தகட்டூா் பைரவநாத சுவாமி கோயில் திருமண அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் பிரின்ஸ் கோபால் ராஜா தலைமை வகித்தாா். பயிற்சி திட்டத்தை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தாா். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் ஆா். பாலாஜிபாபு, நிா்வாகிகள் வேதரெத்தினம், வைரவநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பையன், தலைமையாசிரியா் ராமசாமி,ரோட்டரி சாசனத் தலைவா் சி. பஞ்சாபகேசன், முன்னாள் தலைவா்கள் தெ. ஆறுமுகம், சித. கருணாநிதி, வை. இலக்குவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com