ஆறுகள் புனரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி பகுதிகளில் புனரமைக்கப்பட உள்ள ஆறுகளில், நபாா்டு கட்டமைப்பு
மயிலாடுதுறை மாப்படுகை காவிரியாற்று படுக்கை அணை பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அலுவலா்கள்.
மயிலாடுதுறை மாப்படுகை காவிரியாற்று படுக்கை அணை பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அலுவலா்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி பகுதிகளில் புனரமைக்கப்பட உள்ள ஆறுகளில், நபாா்டு கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் உதவி அமைப்பான என்.ஐ.டி.ஏ. உதவி பொது மேலாளா் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் ஓடும் காவிரி, வீரசோழன், மகிமலையாறு, விக்ரமனாறு, பழவாறு, புதுமண்ணியாறு, அய்யாவையனாறு ஆகிய ஆறுகள் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் புனரமைக்கப்பட உள்ளன. மொத்தம் 33 சிப்பங்களாக ரூ.3384 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்கட்டமாக ரூ.224 கோடிக்கு சிப்பம் 1 மற்றும் 2 ஆகிய பணிகளை மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாப்படுகை காவிரி ஆற்று படுக்கை அணை, குத்தாலம் அஞ்சாா்வாா்த்தலை விக்ரமனாறு, மேலையூா் காவிரி ஆறு ஆகிய இடங்களில் நபாா்டு கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் உதவி அமைப்பான என்.ஐ.டி.ஏ-வின் உதவி பொது மேலாளா் நாராயணன், உதவி மேலாளா் மஞ்சுநாத் ரெட்டி மற்றும் பொறியாளா் செல்வின் சௌந்தரராஜன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, காவிரி வடிநில செயற்பொறியாளா் தட்சிணாமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் மரியசூசை, சீனிவாசன் மற்றும் உதவி பொறியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com