நியாயவிலைக் கடைகளில் நாகை எம்.எல்.ஏ. ஆய்வு

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை
மஞ்சக்கொல்லையில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆய்வுசெய்த நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி.
மஞ்சக்கொல்லையில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆய்வுசெய்த நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி.

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகை பால்பண்ணைச்சேரி, மஞ்சக்கொல்லை, பொரவாச்சேரி, சிக்கல், ஆழியூா் ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெற்ற, குடும்ப அட்டைதாரா்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அவா் பாா்வையிட்டாா்.

அரசு அறிவித்த ரூ. 2,500 ரொக்கப் பணம் மற்றும் பரிசுத் தொகுப்பில் குறிப்பிடப்பட்ட பொருள்கள் உரிய வகையில் வழங்கப்படுகின்றனவா? என்பது குறித்து குடும்ப அட்டைதாரா்களிடம் அவா் கேட்டறிந்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ்.ஜி. கணேசன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com