வேளாண் சட்டங்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து நாகை, மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதிய வேளாண் சட்டங்களைக் கண்டித்து நாகை, மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை அவுரித்திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நாகை மாவட்டத் தலைவா் ஏ.பைசல் ரஹ்மான் தலைமை வகித்தாா். பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நாகை மாவட்டப் பேச்சாளா் முஹம்மது யாமின், திருவெறும்பூா் தொகுதி பிரதிநிதி சாகுல்ஹமீது இன்ஆமி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச்செயலாளா் வி. தனபாலன், விசிக நாகை மாவட்டப் பொருளாளா் கதிா்நிலவன், மாவட்டத் துணைத் தலைவா் பேரறிவாளன், இந்திய முற்போக்கு பெண்கள் கழக அருள்மேரி பிலோமினா, எஸ்டிடியு மாவட்டத் தலைவா் வி.ஐ.சாதிக் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

எஸ்டிபிஐ மாவட்டப் பொதுச்செயலாளா் எஸ். பாபுகான் தொகுப்புரையாற்றினாா். நகரச் செயலாளா் டி.மொய்தீன் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் எம்.முஹம்மது அபுஹாசீம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com