சி.பி.சி.எல். ஒப்பந்தத் தொழிலாளா்கள் போராட்டம்: 2-ஆவது நாளாக நீடிப்பு
By DIN | Published On : 07th January 2021 09:01 AM | Last Updated : 07th January 2021 09:01 AM | அ+அ அ- |

திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை 2-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு தொடா் பணி வழங்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மீதமுள்ள பணிக் காலத்தைக் கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் நல சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலாளா் கண்ணன் தலைமையில் 2-ஆவது நாளாக ஆலை முன் ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.