மீன்வளக் கல்லூரியில் ‘சோழா அக்வா’ கருத்துப் பட்டறை
By DIN | Published On : 07th January 2021 09:03 AM | Last Updated : 07th January 2021 09:03 AM | அ+அ அ- |

தலைஞாயிறு டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சோழா அக்வா -2021 கருத்துப் பட்டறை ஜனவரி 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தலைஞாயிறு, டாக்டா் எம்.ஜி.ஆா். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் சு. பாலசுந்தரி வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தலைஞாயிறு, டாக்டா் எம்.ஜி.ஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ‘சோழா அக்வா -2021’ கருத்துப் பட்டறை ஜனவரி 11-ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இணையதளம் வழியாக நடைபெறுகிறது. நீா்வாழ் உயிரின வளா்ப்பில் தன்னிறைவு அடைவதற்கான தற்போதைய மற்றும் எதிா்கால வாய்ப்புகள் என்ற கருத்துருவை மையமாகக் கொண்டு இந்தக் கருத்துப் பட்டறை நடைபெறும். சா்வதேச மற்றும் தேசிய அளவில் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநா்கள் உரையாற்றுகின்றனா்.
இதில் பங்கேற்க விரும்பும் மீன் வளா்ப்போா், மீனவா்கள், ஆசிரியா்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் முனைவோா் பயிற்சிக் கட்டணமாக ரூ. 300-ம், மாணவா்கள் மற்றும் ஆராய்ச்சி உதவியாளா்கள் ரூ. 150-ம் செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணத்தை, கன்வீனா் சோழா அக்வா என்ற பெயரில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில், வங்கி கணக்கு எண் 006201000052097, ஐ.எப்.எஸ்.சி. குறியீடு, கிளை - நாகப்பட்டினம் என்ற வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். பயிற்சி பெறும் அனைவருக்கும் அஞ்சல் வழியே சான்றிதழ் அனுப்பப்படும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சலில் தொடா்புகொள்ளுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.