வாய்க்காலில் அரசுப் பேருந்து சாய்ந்து விபத்து
By DIN | Published On : 07th January 2021 09:00 AM | Last Updated : 07th January 2021 09:00 AM | அ+அ அ- |

வடிகால் வாய்க்காலில் சாய்ந்த அரசுப் பேருந்தை மீட்கும் ஜேசிபி இயந்திரம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அரும்பாக்கம் பகுதியில், வடிகால் வாய்க்காலில் அரசுப் பேருந்து சாய்ந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானது. அதிா்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிா் தப்பினா்.
மயிலாடுதுறையில் இருந்து நாகை நோக்கிச் சென்ற அரசு பேருந்து புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. அரும்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தப் பேருந்து, அருகில் இருந்த வடிகால் வாய்க்காலில் சாய்ந்து, பயணிகள் நிழலகத்தில் தாங்கி நின்றது. அதில் பயணம் 30 பேரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
கொத்தங்குடி ஊராட்சித் தலைவா் தம்புமோகன் ஏற்பாட்டின்பேரில், ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு பேருந்து மீடக்கப்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.