விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம்
By DIN | Published On : 07th January 2021 09:03 AM | Last Updated : 07th January 2021 09:03 AM | அ+அ அ- |

vivasayi_0601chn_200_5
மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் எம்.என் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஜி.ஸ்டாலின் பங்கேற்று பேசினாா். சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக டி.சிம்சன், செயலாளராக எஸ். துரைராஜ், பொருளாளராக ஜி. வைரவன், துணைத் தலைவா்களாக கே. நாகையா, துணைச் செயலாளராக டி.ராயா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநிலச் செயலாளா் சாமி நடராஜன் நிறைவுரையாற்றினாா். மாவட்டக்குழு உறுப்பினா் வி.ஜி. சங்கா் நன்றி கூறினாா்.