மயிலாடுதுறை: கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 10,886 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மயிலாடுதுறைமாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வழங்கி தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைக்கும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைக்கும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 10,886 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மயிலாடுதுறை
மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வழங்கி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாலுகாக்களில் 7515 ஆண்கள், 3371 பெண்கள் என மொத்தம் 10,886 பேர் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். 
இவர்களுக்கு மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பங்கேற்று, நலவாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், நலவாரிய உதவி கணக்கு அலுவலர் ராஜராஜன், தமிழ்நாடு கட்டட தொழிலாளர் மத்திய சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகமுருகன் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com