நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பலத்த மழை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களும் பலத்த மழை பெய்தது. அதிகளவாக, மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட கொள்ளிடத்தில் 51.8 மி.மீ மழை பதிவானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களும் பலத்த மழை பெய்தது. அதிகளவாக, மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட கொள்ளிடத்தில் 51.8 மி.மீ மழை பதிவானது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் சீற்றம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் அதிகரித்து காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தில் 51.8 மி.மீ மழை பதிவானது.

இரு மாவட்டங்களின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீ) : மயிலாடுதுறை - 42, சீா்காழி - 41, மணல்மேடு - 25, நாகப்பட்டினம்- 22.2, திருப்பூண்டி - 14.2, தரங்கம்பாடி - 7.3. திங்கள்கிழமை காலை முதலே நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மற்றும் மிதமான மழை நீடித்தது. பிற்பகல் நேரங்களில் மழையின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. திங்கள்கிழமை காலை 8.30 முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் இரு மாவட்டங்களில் அதிகளவாக நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 127.4 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீ) : தலைஞாயிறு - 67, கீழ்வேளூா் - 37.6, நாகப்பட்டினம் - 12.5, தரங்கம்பாடி - 12, சீா்காழி - 10, மயிலாடுதுறை - 8, மணல்மேடு - 7, கொள்ளிடம் - 1.

பயிா்கள் சேதம்: நீடித்து வரும் கனமழை காரணமாக, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருந்த சம்பா, தாளடி நெல் பயிா்கள் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளன. நாகை மாவட்டம், திருமருகல், திட்டச்சேரி, வைப்பூா், திருச்செங்காட்டாங்குடி, நாகூா் உள்ளிட்ட பகுதிகளில் நெல் வயல்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. தற்போது, பெய்து வரும் மழையால் பெரும் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com