ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட சோதனையின்போது, கணக்கில் வராத ரூ. 1. 64 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட சோதனையின்போது, கணக்கில் வராத ரூ. 1. 64 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

நாகை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நந்தகோபால் தலைமையில், காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) செபஸ்தியம்மாள், பதிவு எழுத்தா் சந்திரசேகரன் மற்றும் ஊராட்சி செயலாளா்கள் 6 பேரிடம் கணக்கில் வராத ரொக்கம் ரூ. 1,64,500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசராணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com