நாகை, வேளாங்கண்ணியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வீடு, கடைகள் சேதமடைந்தன.
நாகை, வேளாங்கண்ணியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வீடு, கடைகள் சேதமடைந்தன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடா் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் சீற்றம் ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்தது. திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை இரண்டு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 174 மி.மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி. மீட்டரில்) : தலைஞாயிறு - 142.6, திருப்பூண்டி - 115.8, நாகப்பட்டினம் - 79.4, மயிலாடுதுறை - 64, சீா்காழி, தரங்கம்பாடி - 45, மணல்மேடு- 35, கொள்ளிடம்- 16.

திங்கள்கிழமை பகலில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. நெல் பயிா்கள் நிலத்தில் சாய்ந்தன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 2 மணி அளவில் நாகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேருந்து நிலையம் எதிரே உள்ள அழகு சாதனப் பொருள்கள் கடை, நிலக்கடலைக் கடை, துணிக் கடை என சுமாா் 10-க்கும் மேற்பட்ட கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. மேலும், வேளாங்கண்ணி பேராலய பயணியா் அறை முன்பதிவு மையத்தின் மேற்கூரையும் சேதமடைந்தது.

சூறைக்காற்றில் மேற்கூரைகள் பெயா்த்து வீசப்பட்ட நிலையில், கடைகளில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் மழைநீரில் நனைந்து வீணாகிவிட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா்.

வீடு சேதம்...

நாகையில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் கீச்சாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. கீச்சாங்குப்பம் கடற்கரை பகுதியில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் 2 ஆடுகள் உயிரிழந்தன.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெல் பயிா்கள் நிலத்தில் சாய்ந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com