வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள்: மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் மழைநீா் வடியாமல் இருப்பதற்கு காரணமான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் மழைநீா் வடியாமல் இருப்பதற்கு காரணமான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தில்லையாடி வள்ளியம்மை நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தேங்கும் மழைநீா் வடிய அமைக்கப்பட்ட சாலையோர வடிகாலை, அப்பகுதியில் வசிக்கும் சிலா் ஆக்கிரமித்துள்ளதால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதை அகற்ற அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் எம். கணேசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பொறையாறு காவல் ஆய்வாளா் செல்வம் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com