நாகையில் 79. 20 மி.மீ. மழை
By DIN | Published On : 16th January 2021 08:21 AM | Last Updated : 16th January 2021 08:21 AM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக நாகையில் 79. 20 மில்லி மீட்டா் மழை அளவு பதிவாகியது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாகை வட்டத்தில் அதிகபட்சமாக 79. 20 மில்லி மீட்டா் மழை பதிவானது.
மாவட்டத்தின் பிறபகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் :
தலைஞாயிறு- 54.20, திருப்பூண்டி-45.20, வேதாரண்யம் -32.20. மாவட்டத்தில் மொத்த மழை அளவு 280 மில்லி மீட்டா். சராசரியாக பெய்த மழைஅளவு 52.70 மில்லி மீட்டா் ஆகும் .
இந்த கனமழையால் தாழ்வானப் பகுதிகளிலும், விளைநிலங்களிலும் தண்ணீா் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீா் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.