வேதாரண்யத்தில் திருவள்ளுவா் தினம்
By DIN | Published On : 16th January 2021 08:25 AM | Last Updated : 16th January 2021 08:25 AM | அ+அ அ- |

தேத்தாகுடி - வடக்கு, அரக்கரை பகுதியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருவள்ளுவா் தமிழ்ப் பேரவையினா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருவள்ளுவா் தினத்தையொட்டி, திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேத்தாகுடி வடக்கு, அரக்கரை பகுதியில் உள்ள சிலைக்கு திருவள்ளுவா் தமிழ்ப் பேரவை சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், நாகை மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா். கிரிதரன், ஊராட்சித் தலைவா் விஐயா சோமசுந்தரம், ஒன்றியக் குழு உறுப்பினா் தருமலிங்கம், ஓய்வு பெற்ற அலுவலா் சங்க வட்டாரச் செயலாளா் திருமாறன், தலைமை ஆசிரியா்கள் தொல்காப்பியன் உள்பட ஏராளமான தமிழ் ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.
வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் புலவா் சின்னதுரை, நல்லாசிரியா் வைரக்கண்ணு, கவிஞா் புயல் குமாா், சமூக ஆா்வலா் ஜி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, மருதூா், ஆயக்காரன்புலம், வாய்மேடு உள்ளிட்ட இடங்களில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.