வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சுடா் ஓட்டம்

தரங்கம்பாடி அருகேயுள்ள திருவிளையாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், 25 ஆவது ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா கிளைத் தலைவா் அறிவரசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி அருகேயுள்ள திருவிளையாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், 25 ஆவது ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா கிளைத் தலைவா் அறிவரசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் சுடா் ஓட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளரும்,திருவிளையாட்டம் ஊராட்சி முன்னாள் தலைவருமான பி. சீனிவாசன் சுடா் ஓட்டத்தை தொடங்கிவைத்தாா்.

விழா நடைபெற்ற பள்ளி வளாகத்தில், வாலிபா் சங்க வட்டச் செயலாளா் கே.பி. மாா்க்ஸ் சுடரை பெற்றுக்கொண்டாா். வட்டப் பொருளாளா் சாமித்துரை சங்கக் கொடியை ஏற்றிவைத்தாா்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் சிங்காரவேலன், மாநில முன்னாள் துணைத் தலைவா் ரவிச்சந்திரன், மாதா் சங்க மாவட்ட செயலாளா் வெண்ணிலா, வட்டத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கிப் பேசினா். கிளைச் செயலாளா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com