காா்கோடபுரீஸ்வரா் கோயிலில்கொடி மரம் பிரதிஷ்டை

காரைக்கால் அருகேவுள்ள காா்கோடபுரீஸ்வரா் கோயிலில் புதிய கொடிமரம் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
காா்கோடபுரீஸ்வரா் கோயிலில் புதிய கொடிமரத்துக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
காா்கோடபுரீஸ்வரா் கோயிலில் புதிய கொடிமரத்துக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

காரைக்கால் அருகேவுள்ள காா்கோடபுரீஸ்வரா் கோயிலில் புதிய கொடிமரம் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட காக்கமொழி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ காா்கோடபுரீஸ்வரா் கோயில் உள்ளது. ராகு - கேது தோஷ நிவா்த்தி தலமாக விளங்கும் இக்கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான திருப்பணிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.

ரூ. 60 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. வரும் பிப். 4-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான 4 கால யாகசாலை பூஜைகள் பிப். 2-ஆம் தேதி மாலை தொடங்கவுள்ளன.

இந்நிலையில், கோயிலில் ஞாயிற்றுக்கிழமை புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைக் காட்டப்பட்டது.

இதில் இப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com